Pages

Ads 468x60px

Monday, April 30, 2012

தலையில் பலத்த அடிபட்ட பின்னர் கணித மேதையாக உருவெடுத்த 'மிராக்கிள் மேன்'


Maths Genius 
வாஷிங்டன்: ஒரு விபத்து ஒரு மனிதனை முடக்கிப் போடும் என்பதுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்... ஆனால் ரவுடிகளால் மிகக் கொடூரமாக தலையில் தாக்கப்பட்டு பலத்த காயத்தைச் சந்தித்த பின்னரும் ஒருவர், மருத்துவ உலகையே ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் "கணித மேதை"யாக திகழ்கிறார் என்றால் நம்புவீர்களா?

நம்பித்தான் ஆகவேண்டும்.. அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜசோன் பட்கெட்ஸ். 41 ஆண்டுகளுக்கு முன்பு சில ரவுடிகள் தெருவில் சென்று கொண்டிருந்த அவரைக் கடுமையாகத் தாக்கி தூக்கிப் போட்டுவிட்டனர். தலையில் பலத்த காயமடைந்த ஜசோனின் மூளை சேதமடைந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறியதால் கல்லூரிப் படிப்பை தொடர முடியாதவராகிப் போனார்.

ஆனால் இப்போது கணித சூத்திரங்களை அத்துப்படியாக சொல்கிறார்.புதிய சூத்திரங்களை உருவாக்குகிறார். .புதிய கணித வரைபடங்களை போட்டுத் தள்ளுகிறார்...

தலையில் பலத்த அடிபட்ட ஒரு மனிதனால் இது சாத்தியமா என்றால், இதை ஒரு அரிய அற்புதம் என்று வர்ணிக்கிறது மருத்துவ உலகம்.. தலையில் பாதிப்பு ஏற்பட்டும் எப்படி அவரது மூளை இப்படி அற்புதமாக வேலை செய்கிறது என்று மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர் மருத்துவர்கள்..வெளிநாட்டில் இருந்தும்கூட வாஷிங்டன் வந்து அவரைப் பார்த்துவிட்டு போகின்றனராம்..

0 comments:

Post a Comment