Pages

Ads 468x60px

Sunday, April 22, 2012

இந்திய இளைஞர்களே - இவர் யார் என்று தெரிகிறதா ?

                            
இந்திய இளைஞர்களே - இவர் யார் என்று தெரிகிறதா ?.இந்தியாவின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா" விருதை கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் "சச்சின் டெண்டுல்கருக்கு " வழங்க வேண்டும் என்ற கருத்து வரும் போதெல்லாம், சச்சினுக்கு முன்னதாக "தயான் சந்த்'க்கு" வழங்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் வரும்.

ஆம் இவர்தான் தயான் சந்த் - ஹாக்கி மந்திரவாதி. அது என்ன ஹாக்கி மந்திரவாதி என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றும். ஹாக்கியை தேசிய விளையாட்டாக கொண்ட நாம் இன்று ஒலிம்பிக்'ல் நேரடியாக பங்கு பெற முடியாமல் தகுதிச்சுற்றில் போராடிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் 1920 - 1940 களில் இந்திய ஹாக்கி அணி அசைக்கமுடியாத வலிமையான அணியாக இருந்தது. அதற்கு காரணம் இவர் தான். இவரின் திறமையான ஆட்டத்தால் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில்  தொடர்ந்து மூன்று முறை (1928, 1932 , 1936)தங்கம் வென்றது. எப்பேற்பட்ட பந்தையும் கோல் ஆக மாற்றும் அசாத்திய திறமை படைத்தவர்.

ஒரு முறை தயான் சந்த் விளையாடும் போது, வயதான ரசிகர் ஒருவர் "அவருடைய ஹாக்கி ஸ்டிக்'ல் ஏதோ மந்திரம் உள்ளது. அதனால் தான் அவர் இவ்வளவு கோல்கள் அடிக்கிறார் என்று குறை கூறினார். உடனே தயான் சந்த் அந்த ரசிகரின் கைதடியை வாங்கி விளையாடினார். அப்போதும் பல கோல்கள் அடித்தார். இதனால் ஆச்சர்யமடைந்த அந்த ரசிகர் இவர் உண்மையான ஹாக்கி மந்திரவாதி என்றார்". அன்று முதல் அவர் ஹாக்கி மந்திரவாதி என்றே அழைக்கபடுகிறார். 

வெளிநாட்டு விளையாட்டான கிரிக்கெட்டுக்கு இருக்கும் ரசிகர்கள் நமது தேச விளையாட்டான ஹாக்கிக்கு இல்லை. அதனால் தான் இந்திய ஹாக்கி அணி திறமையான வீரர்கள் இல்லாமல் பின்னோக்கி செல்கிறது. வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களைப் பற்றி தெரிந்த இந்திய இளைஞர்கள் நிறைய பேருக்கு ஹாக்கி மந்திரவாதி தயான் சந்த் பற்றி தெரியவில்லை.

எப்படி கிரிக்கெட்டுக்கு சச்சின் டெண்டுல்கரைப் போல இன்னொருவர் கிடைக்கபோவதில்லையோ அதே போல ஹாக்கிக்கு தயான் சந்த் போல இன்னொருவர் கிடைக்கபோவதில்லை. இது மறுக்க முடியாத உண்மை.

0 comments:

Post a Comment