உலகிலேயே அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட மதம் சாராத ஒரே இலக்கியம் திருக்குறள் மட்டுமே! இது காலங்கடந்தும் எக்காலத்திற்கும்
பொருந்தக் கூடிய வாழ்கை வழிகாட்டியாகவும் தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகின்றது.
பொருந்தக் கூடிய வாழ்கை வழிகாட்டியாகவும் தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகின்றது.
இது தமிழ் மொழியின் பெருமைகளுள் முக்கியமானது. திருக்குறளின் பெருமை உணர்ந்து அனைவரும் அறியும் விதமாக பிரான்ஸ் அரசு தங்களுடைய
பிராந்திய விரைவுத் தொடருந்துகளிலும் பேருந்துகளிலும் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து எழுதியுள்ளதோடு அதற்கு அருகில் எழுதியவர் தமிழர்
திருவள்ளுவர் எனவும் எழுதியுள்ளார்கள்.
பிராந்திய விரைவுத் தொடருந்துகளிலும் பேருந்துகளிலும் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து எழுதியுள்ளதோடு அதற்கு அருகில் எழுதியவர் தமிழர்
திருவள்ளுவர் எனவும் எழுதியுள்ளார்கள்.
Tu aurais tes adorateur, Ô Lune
si tu rayonnais comme le visage de la femme.
எனும் குறளே இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. அதற்கு பிரெஞ்சு மொழியில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அக்குறளின்தமிழாக்கம் கீழே வழங்கப்பட்டுள்ளது.
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி, மதி
காதலை வாழி, மதி
விளக்கம்:
ஓ வான்மதியே! நீயும் என் காதலியின் முகம் ஒளி வீசுவது போல் பொலிவுடன் ஒளி வீசுவாய் என்றால், அவளைப் போலவே என் காதலுக்கு உரியவள் ஆகி விளங்குவாய்!
மதியின் முகத்தில் உள்ள களங்கம், தன் காதலியின் முகத்தில் இல்லை..களங்கமின்றி ஒளிவீசும் காதலியின் முகத்தை வர்ணிக்க வந்த தலைவன்,
நிலவு தன் முகத்தில் உள்ள களங்கத்துடன் ஒரு போதும் தலைவியிடம் போட்டியிட முடியாது என்ற தன் பெருமித உணர்வை மறைமுகமாக வெளிப்படுத்துகிறான்.

இது பிரெஞ்சு மண்ணில் தமிழ் மொழிக்கும் தமிழ் மறை எனப் போற்றப்படும் திருக்குறளுக்கும் அளிக்கப்பட்டகௌரவமாகும்.
தமிழ் மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டாடும் நாட்டை விட பிரெஞ்சு அரசு
தமிழ் மொழிக்கான கௌரவத்தைவழங்கியுள்ளது.
தமிழ் மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டாடும் நாட்டை விட பிரெஞ்சு அரசு
தமிழ் மொழிக்கான கௌரவத்தைவழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment